ஞாயிறு, 13 மார்ச், 2016

செக்ஸ் அடிமைகளை கருத்தரிக்காமல் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

சுழற்சிமுறையில் ஒரு முகாமில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பப்படும் இந்தப் பெண்கள், களத்தில் இறங்கி போரிட்டுவரும் தீவிரவாதிகளின் உடல்பசியை தீர்க்கும் விருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வினியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது எனக்கருதி, தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களுக்கு வாய்வழியாக உடகொள்ளும் மாத்திரை களாகவும், ஊசிமருந்துகளாகவும் கருத்தடை மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
தப்பித்தவறி, யாராவது கருத்தரித்து விட்டால் உடனடியாக மருத்துவரை வைத்து கருச்சிதைவு செய்யப்பட்டு, அதே பெண்கள் மீண்டும் வழக்கமான ‘சேவைக்கு’ அனுப்பப்படுவதாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சிலபகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள்,

 இருநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான அழகிய இளம்பெண்களை கைது செய்து அவர்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சிலர் 12 வயதுக்கும் உட்பட்ட சிறுமியர் என தெரியவந்துள்ளது.