புதன், 6 ஏப்ரல், 2016

கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:புதிய அரசியல மைப்பு பேரவை குறித்து டக்ளஸ் தேவானந்தா (வீடியோ இணைப்பு)

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு நாடாளு மன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக இன்று (05) மாற்றப்பட்டுள்ளது.
 
இலங்கை நாடாளுமன்றம் இன்று அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. குறித்தஅரசியலமைப்ப பேரவைின் செயற் பாட்டுக்குழுவின் உறுப்பினரார்களுள் ஒருவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த அரசியல் பேரவைகுறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது –

இன்றைய இந்த நிகழ்வானது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் பிரதமர் அவர்கள் இந்த சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த வகையில் முதலில் நான் அவருக்கு என்னுடைய மக்கள் சார்பாக நன்றியைக் கூறுகின்றேன். அதேவேளை, கடந்த கலங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இருந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அந்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுடைய தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
 
இலங்கை இந்திய ஒப்பந்தம், அதற்குப் பின்னர் ஜனாதிபதி பிரேமதாஸாவினுடைய முயற்சிகள், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடைய முயற்சிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினுடைய முயற்சிகள், இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
 
ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் தலைமைகள் என்று சொல்லப்படுபவர்கள் அதை சரியாகப் பயன்படுத்த முடியாததன் விளைவாக மக்கள் பலத்த அழிவுகளையும், இழப்புக்களையும் சந்திக்க வேண்டி வந்தது. அதிலிருந்து இன்று மக்கள் மீண்டு வந்தாலும், அவர்களுடைய நீண்டகால அபிலாஷையாக, ஒரு கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கின்றது. ஆனபடியினால் தமிழ்த் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
 
இந்த 21 பேர் கொண்ட செயற்பாட்டுக் குழுவொன்று பாராளுமன்றத்தினுடைய அங்கீகாரம் பெற்றிருக்கின்றது. அந்தக் குழுவில் நானும் இருக்கின்றேன். அதுபோல தமிழ்த் தரப்பு அல்லது தமிழ் பேசும் தரப்பு என்கின்ற பொழுது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தன்;, மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவராக சுமந்திரன்;, மற்றது மனோகணேசன் மற்றும் நான்; அமைச்சர் ஹக்கீம்;, அமைச்சர் ரிஷாட்;. தமிழ் பேசும் மக்கள் என்கின்ற பொழுது ஒரு கணிசமான அளவு சிறுபான்மை மக்களின் பிரசன்னம் இருக்கின்றன. இதில் நானும் இருப்பதனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் என்று கூறியவர்களால் தவற விட்டதைப் போல் தற்போது தவறவிட இடமளிக்க மாட்டேன் என தெரிவித்தள்ளார்.