சட்டத்தரணி அருண லக்சிறியினால் இன்றைய தினம் (10) உச்சநீதிமன்றத்தில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனுவில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இடைக்கால தடையே அமுல்படுத் தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற பாராளுமன்றத்தை கூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வழக்கு நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பாதிப்பை ஏற்படுத்து வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற பாராளுமன்றத்தை கூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வழக்கு நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பாதிப்பை ஏற்படுத்து வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அரசியலமைப்பின் 105/3 ஆம் பிரிவுக்கு அமைய நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனுக்களை அடுத்து, கடந்த நவம்பர் 13 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், கடந்த நவம்பர் 04 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, பாராளுமன்ற அமர்வை நவம்பர் 14 ஆம் திகதி கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

