திங்கள், 17 டிசம்பர், 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புளியங்குளம் ஆரம்ப பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புளியங்குளம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எதிர்கொண்டுவந்த தீராப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டள்ளது.

இது தொடர்பில் தெரியவரவதாவது –

புளியங்குளம் ஆரம்ப பாடசாலை நீண்ட காலமாக ஓலையால் வேயப்பட்ட கொட்டகையுடன் இயங்கி வந்தமையால் மழை காலங்களில் குறித்த வகுப்பறைகுள் வெள்ளம் சூழ்ந்ததாக காணப்பட்டன.

 
இதனால் அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பபுக்களுக்கு உள்ளாவதுடன் மாணவர்களின் கற்றல் உபகரணங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் பழைய மாணவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா – புளியங்குளம் பிரதேச வட்டார செயலாளருமான விஜயரட்ணம் சுரேந்தர் அவர்களின் தீவிர முயற்சியின் யனாக எக்கத்துவ எனும் நிறுவன்தின் உதவியுடன் நிரந்தர கட்டமாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த பாடசாலையில் கல்விகற்கும் 50 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.