கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளவர்கள் தமது தொழில் மற்றும் கல்வியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் சிந்தித்து பயணத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவித்ததாவது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.
இதற்கமைய 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதில் 28 ஆயிரம் பேர் புலம்பெயர்தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு அந்நாட்டினால் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் கிடைக்காததனால் அவர்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்புகின்றனர்.
எனினும் தொழிலில் உள்ளவர்கள் கொரோனா பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு குறுகிய கால விடுமுறைக்காக இலங்கை வர விரும்பியுள்ளனர்.
இதனால் அவர்கள் தமது தொழில் மற்றும் கல்வியை இழக்க நேரிடும்.எனவே தற்போதைய சூழ்நிலையில்
நாடு திரும்புவதன் அவசியம் தொடர்பில் நன்கு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.