ருகுணு பல்கலைகழக மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவிடம், பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் வாய்மூலமாகவோ எழுத்துமூலமாகவோ சம்பவம் குறித்து சாட்சியமளிக்கலாம்.
சாட்சியமளிக்க விரும்பின் எதிர்வரும் செப்டம்பர் 03 திகதிக்கு முன்னதாக 0112669054 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது ஹெட்மன் ஜெயசூர்ய, விசாரணைக்குழு செயலாளர், அறையெண் 4-115, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு-07 என்ற முகவரியுடனோ தொடர்பு கொண்டு சாட்சியமளிக்கலாம்.
