இந்திய மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று சென்னை விஜயம் மேற்க்கொண்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை சந்திக்கும் அவர் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணம் உரிய முறையில் போய்ச் சேரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அதைக் கண்காணிக்க ஒரு குழுவை அனுப்பலாம் என்று முதல்வரிடம் பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே நிருபமா ராவ் அது குறித்து விவாதிக்கவே முதல்வர் கருணாநிதியை சந்திப்பதாகத் தெரிகிறது.
