வடகிழக்கில் யுத்தத்தின் போது கணவன்மாரை இழந்த 89 ஆயிரம் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். இதன்படி கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகளுக்கும் வடக்கில் 40ஆயிரம் விதவைகளுக்கும் இந்திய அரசின் உதவியுடன் சுயதொழில் வாய்ப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் முதல் கட்டமாக கணவனை இழந்து தமது குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ள 800 விதவைகளுக்கு கிழக்கில் சுயதொழில் வாய்ப்புக்கான நிதியுதவி இந்திய உதவியுடன் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
