யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக்களையொட்டி ஆலயச் சூழலில் அமைக்கப்படும் தேநீர்க் கடைகள், மற்றும் உணவுச் சாலைகள் என்பவற்றில் வைக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் உரிய இடத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென யாழ். மாநகர சபையின் சுகாதார குழுவின் தலைவர் மங்களேஸ்வர் தெரிவித்துள்ளார்.
வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் உணவகங்களில் விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவுகளை மீறி செயற்படுகின்ற உணவகங்களின் உத்தரவுப்பத்திரங்கள் யாவும் நீக்கப்படுவதுடன் உணவகங்கள் உடனடியாக பூட்டி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
