தமிழர்களின் அரசாக நாடு கடந்த தமிழீழ அரசு இருந்து வருவதால் எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்துள்ள அகதிகளின் அவலநிலைமை குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளனர் என்று அந்த அரசின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளார்கள்.
அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரி உள்ளார்கள். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு எதுவும் அற்ற நிலையில் ஏதிலிகளாக இவர்கள் வந்திருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
இந்த தமிழர்களுக்கு கனேடிய அரசு அவசியமான மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்கள். கனேடிய அரசினால் இம்மக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமைக்கும் கனடாவில் தங்குகின்றமைக்குமான தகைமைகளைப் பெற்றுக் கொள்ள கொள்வதற்குமான செயற்பாடுகளிற்கு நாடு கடந்த அரசாங்கம் தன்னுடைய வளங்களையும் ஆதரவினையும் பயன்படுத்தும் உறுதிப்பாட்டினை கொண்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தற்போதைய சூழ்நிலையை தொடர்ச்சியாக கவனித்து வருவதுடன் இந்த கடுமையான சூழலில் கனேடிய அரசுக்கும் புதிய வருகையாளர்களும் உதவுவதற்கான தனது கடைமைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.
TAMILCNN
