வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஜனநாயக தேசிய முன்னணியினர் முறைப்பாடு

ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினரான நளின் ஹேவகே ஆகியோர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி காலியில் ஜனநாயக தேசிய முன்னணியினர் நடத்திய அமைதியான போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை காலிப் பொலிஸார் வீசிக் கலைத்ததாகவும், அது சம்பந்தமாக காலி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தம்மை தாக்கி கைது செய்ததாகவும் இவர்கள் இம் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.