வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலகோடி கடத்தல்காரர்கள் கைது

நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஹெங்கொங் செல்லவிருந்த இரு நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யபபட்டுள்ளனர். இந்த இருவரில் ஒருவர் இலங்கையர் எனவும் ஒருவர் பிரித்தானியரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யபட்ட இலங்கையரிடம் இலங்கை மதிப்பு 4 கோடியே 3 லட்சம் ஜப்பானிய யென்னும், பிரித்தானியரிடமிருந்து 10 மில்லியன் பெறுமதியான 2428 கிராம் தங்கமும் 2 மாணிக்க கற்களும் மற்றும் இலங்கை மதிப்பு 8 லட்சத்து 90 ஆயிரம் கொண்ட யூரோவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்விருவரையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.