சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 11ஆயிரத்து 500 கோடி ரூபாயினை அரசு கடனாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு முதலும் பாரிய நிதித் தொகையினை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனாக பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான கடனைப்பெற்றால் 7% வட்டியை செலுத்த வேண்டி ஏற்படும் எனவும். இதற்குப் பதிலாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒரு வருடத்திற்கு முன்னர் கூறியது போல் ஏன் கேபியிடம் உள்ள கோடிக் கணக்கான பணத்தை நாட்டின் அபிவிருத்திக்காக பயன் படுத்தக்கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இக்கருத்துக்களை முன்வைத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு கேபி இடமுள்ள பணத்தை உபயோகிக்கவும்
