தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்கள் 9 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை மின்சாரசபை, கம்பனிகளிடமிருந்து மின்சாரத்தை பெறாவிட்டாலும் பணம் செலுத்த வேண்டும். அவ்வகையில் வருடந்தோறும் 15 பில்லியன் ரூபாவை மின்சாரசபை செலுத்த வேண்டியுள்ளது என்று மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக ரத்துச் செய்யும் வழிவகைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபை தனியார் கம்பனிகளிடமிருந்து ஒரு அலகு மின்சாரத்தை 17.56 ரூபாவுக்கு வாங்கி கைத்தொழில் நிறுவனங்களுக்கு 10.30 ரூபா விலையிலும் வீடுகளுக்கு 12.55 ரூபா விலையிலும் வழங்குகின்றது.
மின்சக்தி மற்றும் வலு அமைச்சு குறைந்த செலவில் அனல் மின்சாரத்தை உற்பதி செய்து வேறு வலுக்களால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிடவே விரும்புவதாக அமைச்சர் மேலும் கூறினார்.
