போர்க் காலத்தில் பல ஊடங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டதாகவும் ஒருசில ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
அதுபோன்று ஒருசில அரசியல்வாதிகளும் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கருணா அம்மானை அரசோடு இணைத்துக்கொள் இரு ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் உதவியதாகவும், ஆரம்பத்தில் தமிழ்ச்செல்வன் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள கருணா அம்மனை அரசின் பக்கம் அனுப்ப முயற்சித்ததாகவும் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாற்றுக் கொள்கைகள் காரணத்தினாலேயே அவர் அரசின் பக்கம் இணைந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
