திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இந்தோனேசிய இளைஞனை இலங்கையில் காணவில்லை

கடந்த 9ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தாய்வான் கப்பலில் பணியாற்றிய இந்தோனேஷிய இளைஞன் கடந்த 10ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கிரிஷாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த தாய்வான் கப்பலில் கடமையாற்றி வந்த 22 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு துறைமுக பொலீஸில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.