மன்னார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்று தினங்களுக்கு அங்கு செம்மொழி மாநாடு ஒன்று நடத்தப்பட உள்ளது.
மன்னார் தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்றமையை முன்னிட்டே இம்மாநாடு நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக ஆராயும் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இம்மாதம் 21 ஆம் திகதி சங்கத் தலைவர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் மன்னாரில் உள்ள ஜெய்க்கா மண்டபத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.
மன்னாரில் வாழும் தமிழ்மொழி ஆர்வலர்கள், அபிமானிகள், அரச உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களும் இவ்வாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளார்கள்.
