புதன், 18 ஆகஸ்ட், 2010

கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை

கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள உணவகங்கள் பலவற்றில் பொது சுகாதார அதிகாரிகள் இன்று புதன்கிழமை திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி உணவகங்களில் சுத்தமான முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பிலேயே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுகாதார அதிகாரிகள் ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகங்களிலும் புறக்கோட்டை மரக்கறிச் சந்தையிலும் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உணவுப் பொருள் மாதிரிகளை சுகாதார அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டதுடன், பெரும்பாலான உணவகங்களில் ஆரோக்கியமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.