திங்கள், 6 செப்டம்பர், 2010

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.