யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் அரச அதிபர்களுக்கான மாநாடு நடைபெறவுள்ளது. அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நடைபெறும் இதில் பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர்க ளும் கலந்து கொள்வர்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேற் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அரச அதிபர்களுக்கான மாநாடு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
