திங்கள், 6 செப்டம்பர், 2010

மூன்றாம் தவனை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை பாடசாலை செல்ல வேண்டும்

மூன்றாம் தவனை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் கல்விப் பொதுத்த தாரதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்பட மாட்டாதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் மூன்று கட்டங்களாக திறக்கப்படவுள்ளன. இதன்படி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் 20ம் மற்றும் 27ம் திகதிகளில் திறக்கப்படவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 46 பாடசாலைகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன. இதேவேளை, நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவனை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.