ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளைப் பார்த்த நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான வீடியோ காட்சிகளை பார்வையிட்ட தமிழ் இளைஞர்கள் நால்வரை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கந்தளாய், ஊறணி பிள்ளையார் பிரதேசத்தில் வைத்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகள் முடுக்கி விட்டுள்ளார்கள்.

இந்த வீடியோ காட்சிகளை இவர்களுக்கு வழங்கிய நபரையும் கைது செய்கின்றமைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்.