ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது

பதுளை நகரில் கடந்த சில தினங்களாக தடுமாறிக் கொண்டிருந்த முல்லைத்தீவு பகுதியை வதிவிடமாகக் கொண்ட இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து பதுளை பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.