திங்கள், 6 செப்டம்பர், 2010

உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மூத்த பத்திரிகையாளர் ரி.எஸ். திஸநாயகம் இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இம்மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான சலீல் மர்சூக் தலைமையில் சக நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ஆர்.கே.எஸ். சுரேஸ் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அவருடைய கட்சிக்காரருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இம்மனுவை வாபஸ் பெறுகின்றாரென நீதிமன்றுக்கு தெரிவித்தார். நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்து அம்மனுவை தள்ளுபடி செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.