சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த மருத்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
சவூதி எஜமானத் தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்கின்றமைக்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
