திங்கள், 6 செப்டம்பர், 2010

கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்படையின் பிரதானி என சந்தேகிக்கப்படும் முத்துசாமி இலங்கோவனுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்ய நீதிபதி தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் நீதிபதி உயர்நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தபோது கைது செய்யப்பட்ட இவர் இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்குமூலத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி சந்தேகநபருக்கு எதிராக மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யுமாறு இரகசிய பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த சந்தேகநபர் வெளிநாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை வலையமைப்பை செயற்படுத்தியதாகவும் தீவிரவாதிகள் தங்களுடைய இலக்கை நிறைவேற்றிக் கொள்ள உதவி புரிந்துள்ளதாகவும் நீதிபதி இரகசிய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.