திங்கள், 6 செப்டம்பர், 2010

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் இம்முறை பெரும்போகம் 33,898 ஏக்கரில்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரேதசத்தில் எதிர்வரும் பெரும்போக வேளாண்மை 33,898 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படவுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ். உதயசிறிதர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் பெரும்போக வேளாண்மை விதைப்பு தொடர்பான ஆரம்ப கூட்டம் அண்மையில் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

போரதீவு பிரதேசத்தில் நவகிரி திட்டத்தின் கீழ் 14,649 ஏக்கரிலும் சிறிய நீர்பாசனத்தில் 1223 ஏக்கரிலும் அம்பாறை நீர்பாசனத்தின் கீழ் 7926 ஏக்கரிலும் மானாவரியில் 10 ஏக்கரிலும் இம்முறை பெரும்போக வேளாண்மை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.