புதன், 8 செப்டம்பர், 2010

சீர்திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமில்லை

அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமில்லையென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசின் இச்செயற்பாடானது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியலயத்திலிருந்து பாராளுமன்றம் வரையான அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் அரசியல்யாப்பு தொடர்பான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.