ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் ஞானமில்லையென கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 18 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகைளிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி நாளுக்கு நாள் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும், பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற விவாதத்திலோ அல்லது இடம்பெறப் போகிற வாக்களிப்பிலோ பங்குகொள்ளமல் இருப்பது அரசிற்கு ஆதரவளிப்பதாகவே தென்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
