புதன், 8 செப்டம்பர், 2010

லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்

லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முறையாக இடம்பெறாமையின் காரணமாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க லஞ்சம் பெற்றுள்ள எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படாமையினால் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றில் இரண்டு மக்கள் பெரும்பான்மையை பெற முடியாத அரசாங்கம் பதவி, லஞ்சம் உள்ளிட்டவை வழங்கி எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.