உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இடதுசாரிக் கட்சிகளும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்க உள்ளன.
உத்தேச யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாகவும் 6 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதேவேளை உத்தேச அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனநாயக இடதுசாரி முன்னணி எதிர்வரும் 6 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அதன் செயலாளர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. கூறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம் எட்டப்படவில்லை என்று கூறிய அவர் 6 ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய உள்ளதாக கூறினார்.
