நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முற்படும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானம் மிகவும் முக்கியமானதென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்கட்சித் தலைவர் அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க இந்தியாவின் பங்களிப்பு இன்றியமையாதது என எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க எதிர்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், இந்தியாவுடனும் தாம் இணைந்து செயற்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
