சபுகஸ்கந்த பகுதியில் சிறுவனின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிழந்துள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் கைக்குண்டு இருப்பதாக பொலிஸாரை அந்த இடத்திற்கு அழைத்து சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கப்பம் பெறும் நோக்கில் சப்புகஸ்கந்த பகுதியில் கடந்த மாதம் 31ம் திகதி 9 வயது சிறுவன் கடத்தப்பட்டிருந்தார். பின்னர் கண்டி தலாத்துஓயா பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் தந்தையுடன் வேலைசெய்த நபரே சிறுவனை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
