புதன், 8 செப்டம்பர், 2010

கொழும்ப மாவட்டத்தில் பாடசாலை செல்லாத சிறுவர்கள் குறித்து தகவல் தருக

கொழும்ப மாவட்டத்தில் பாடசாலை செல்லாத சிறுவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு பத்தரமுல்லையிலுள்ள சிறுவர் நீதிமன்றம் கிராம சேவகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மொறட்டுவ, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் உள்ள 53 கிராம சேவகர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் மகளிர் பிரிவு சிறுவர் நீதிமன்றிற்கு விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை எதிர்வரும் 21ம் திகதிக்குள் சேகரித்து அறிக்கை சமர்பிக்குமாறு கிராம ​சேவகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.