ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அரசாங்கம் முன்வைக்கவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் மதத் தலைவர்களை நாடுகிறது ஐ.தே.க

அரசாங்கம் முன்வைக்கவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் மதத் தலைவர்களை தெளிவுபடுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று காலை கண்டி தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.