ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கடந்த காலங்களில் கொழும்பில் தகவல் வழங்காத பெண்ணுக்கு எதிராக வழக்கு

கடந்த காலங்களில் கொழும்பில் குற்றச்செயல்களை புரியும் நோக்கில் வந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் தகவல் வழங்காமளிருந்த தெஹிவளை பிரதேச பெண் ஒருவருக்கு எதிராக பாதுகாப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் கனகராணி என்ற பெண்ணுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு கொழும்பில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் நோக்கில் வந்திருந்த முரளி என்ற தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர் தொடர்பில் குறித்தப் பெண் தகவல் அறிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்காமல் இருந்தமையினால் இவர்மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.