ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

6ம்,7ம்,8ம் திகதிகளில் சாரதிகளை தெளிவுபடுத்த திட்டம்

மேல் மாகாண சாரதிகளை போக்குவரத்து குறித்து தெளிவுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மேல் மாகாண போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக விஜயதிலக்கவின் ஆலோசனையில் எதிர்வரும் 6ம், 7ம், 8ம் திகதிகளில் விசேட வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை பகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து என்பவற்றை குறைப்பது இதன் நோக்கமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த தெளிவுபடுத்தல் நடவடிக்கையின் பின்னர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.