நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீ்சை வினாத்தாள் திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறும் வினாத்தாள் திருத்தும் பணிகளின் முதலாம் கட்டம் கடந்த 30ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று ஆரம்பிக்கப்படும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 18ம் திகதிவரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டம் எதிர்வரும் 13ம் திகதி முதல் 24ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நேற்று ஆரம்பமானதோடு, அவை எதிர்வரும் 9ம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
