சனி, 4 செப்டம்பர், 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் விடுவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 508 பேரை இன்று மாலை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் தெரிவித்தார். இவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுக்குமாறு அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.