மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதி மக்களின் நலன் கருதி மன்னார் பொலிஸ் நிலையத்தினர் பொது மக்கள் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த நடமாடும் சேவை ஒன்று இன்று காலை 9 மணியளவில் உயில்ங்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது பொலிஸ் முறைப்பாடுகள் பதிவு செய்தல், முறைப்பாட்டு பிரதிகளை பெற்றுக் கொள்ளல், பிணக்குகளை தீர்த்து வைத்தல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், ஆலோசனைகளை பெறுதல் மற்றும் பல சேவைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இச் சேவையின் மூலம் அப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நண்மை அடைந்துள்ளனர். இந்த நடமாடும் சேவையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கொடித்துவக்கு, மன்னார் பொலிஸ் அத்தியேட்சகர் ஜெயவர்த்தன, தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த மற்றும் மன்னார் பொலிஸ் பொதுமக்கள் பிரிவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
