சனி, 4 செப்டம்பர், 2010

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க இன்னும் ஏழு எட்டு பேர் வருவர்

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் ஏழு, எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏல் குணசேகர தெரிவிக்கின்றார். இது குறித்து அவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களிடம் மாத்திரமின்றி அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க பொதுவாக நாட்டு மக்களின் ஆதரவை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏல் குணசேகர மற்றும் லக்க்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் நேற்று அறிவித்தனர். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.