வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

யானையில் வந்த 134 பேர் இன்று பதவிப்பிரமாணம்

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 134 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சத்தியப்பிரமாண நிகழ்வின்போது ´ஊழலுக்கு துணைபோக மாட்டோம்´ என உறுப்பினர்களிடன் சத்தியவாக்குப் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.