திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பாகிஸ்தானின் கராச்சி நகரில், நேற்று மீண்டும் ஏற்பட்ட கலவரம்15 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில், நேற்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில், 15 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாக்., பிரதமர் யூசுப் கிலானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கராச்சியில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே, பாக்., அரசின் முதன்மை நோக்கம். கராச்சியில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு, சிந்து மாகாண கவர்னர் மற்றும் முதல்வரின் முதற்கடமை' என, கூறியுள்ளார்