நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இப்பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செப்டெம்பர் 5ம் திகதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒகஸ்ட் 8ம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக 41 பாடசாலைகள் செயற்படுமென கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
