பிற்போடப்பட்டிருக்கும் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒக்டோபர் 17ம் திகதி அல்லது அதற்கு முன்பதாக நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவிருந்த காரணத்தினால் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும், வழக்கு தொடரப்பட்டிருந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு தொடரப்பட்டிருந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜூலை மாதம் 23ம் திகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஓகஸ்ட் 18ம் திகதி தொடக்கம் 25 திகதி வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
17 மாநகர சபைக்கும் 1 நகர சபைக்கும் 5 பிரதேச சபைக்குமான தேர்தல் ஒக்டோபர் 17ம் திகதி அல்லது அதற்கு முன்பதாக நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
