வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கொழும்பு மாநகர சபைக்கு விரைவில் தேர்தல்

கலைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து கொழும்பு மாநகர சபை மீண்டும் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தீர்மானிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் கலைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட அதனை அண்டிய 5 உள்ளூர் சபைகளை இணைத்து நகர அதிகார சபை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது அத்தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.