வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று பகல் மூன்று மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பின்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் மேற்கொள்ள போகும் முதலாவது பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் இதுவரையில் எதுவித முன்னேற்றங்களும் காணப்படவில்லை.

இந்நிலையில் தமிழருக்கான அரசியல் தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின் மூலமே காணப்பட வேண்டும் என வடக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், பாராளுமன்ற குழு அமைத்து அனைத்து கட்சியினராலும் முன்வைக்கப்படும் தீர்வு திட்டத்தையே தான் ஆதரிப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதற்காக என்ற கேள்வி அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.