செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

203 வழக்குகள் ஓரே நாளில் விசாரணை! 17ம் திகதி தீர்ப்பு

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய தர்ஷிகா விமலசிறி முன்னிலையில் நேற்று இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அநுராதபுரம், திருப்பனை, கஹட்டகஸ்திஹிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழக்குகளே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

மனிதக் கொலை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்குகள் சுமார் 10 வருட காலங்களாக நிலுவையில் இருந்துள்ளன.

இந்த 203 வழக்குகளுக்குமான தீர்ப்பு எதிர்வரும் 17ம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.