கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விவாதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அது எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
