செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு அகதிகளை மிரட்டும் காணொளி

ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேயாவில் தஞ்சம் கோருபவர்களை, அவ்வாறான பயணம் மேற்கொள்ளும் மனநிலையிலிருந்து சோர்வடையச் செய்ய மலேஷியாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின்படி அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ள அகதிகளின் பயணத்தின் காணொளியினை யூட்டுயுப்பில் (youtube) பிரசுரிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான காணொளிகள் பிரசுரிக்கப்படும் போது ஆட்கடத்தல்காரர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் ஏமாறமாட்டார்கள் என குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசின் புதிய திட்டங்களை இவ்வாறு வெளிப்படுத்தப்படும் போது சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றாக ஒழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.